பேரம்பாக்கத்தில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பேரம்பாக்கம் காலனி பள்ளிக்கூடத்தெருவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் கழிவறை கட்டி பயன்படுத்துகின்றனர்.
திருவள்ளூர்,
இதுகுறித்து அதிகாரிகளிடம் அந்த பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரையிலும் இதற்கு எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை. கழிவுநீர் கால்வாயும் மூடப்பட்டுள்ளது. ஆகவே கழிவுநீரை அதில் முறையாக விட ஊராட்சி நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலர் தங்கள் வீடுகளில் உள்ள கழிவுநீரை முறையாக வெளியேற்றாமல் அதனை இரவு நேரத்தில் திறந்து சாலையில் விடுகின்றனர்.
இவ்வாறாக அங்குள்ள வீடுகளில் இருந்து விடப்படும் கழிவுநீரானது அந்த பகுதியில் உள்ள சாலையில் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் எந்த நேரமும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் இந்த கழிவுநீரில் நடந்து செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் அந்த பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரையிலும் இதற்கு எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை. கழிவுநீர் கால்வாயும் மூடப்பட்டுள்ளது. ஆகவே கழிவுநீரை அதில் முறையாக விட ஊராட்சி நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story