முற்றுகை போராட்ட அறிவிப்பு எதிரொலி: உடனடியாக தொடங்கியது கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி
முற்றுகை போராட்ட அறிவிப்பு எதிரொலியாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி உடனடியாக தொடங்கியது.
திருச்சி,
திருச்சி மாநகராட்சி 12-வது வார்டு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் சுகாதார கேட்டினால் அவதிப்பட்டு வந்தனர். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் பல நேரங்களில் அதில் விழுந்து உயிர் தப்பிக்க போராடும் நிலையும் ஏற்பட்டது.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை டிசம்பர் 28-ந் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மனித நேய மக்கள் கட்சி அறிவித்து இருந்தது.
போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மாநகராட்சியின் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் அயூப், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் உடனடியாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணியை தொடங்க உத்தரவிட்டு இருப்பதாகவும் அப்போது அவர் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து நேற்று உடனடியாக அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணி தொடங்கி உள்ளது.
நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதியில் உள்ள திறந்த வெளி கழிவுநீர் கால்வாயின் மொத்த நீளம் சுமார் 200 மீட்டர் ஆகும். ஆனால், தற்போது 60 மீட்டர் அளவிற்கு தான் கட்டப்பட்டு வருகிறது. உதவி ஆணையர் உறுதி அளித்தபடி 200 மீட்டர் நீளத்திற்கும் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

Related Tags :
Next Story