மாவட்டத்தில் விபத்து வழக்குகளில் 900 பேருக்கு ரூ.30 கோடி இழப்பீடு - ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் பேச்சு
திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்து வழக்குகளில் 900 பேருக்கு ரூ.30 கோடி இழப்பீட்டு தொகை வந்துள்ளதாக ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீதி மன்றங்களில் ஆய்வு செய்தார். இதையடுத்து, நேற்று மாலை திண்டுக்கல் நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாஷினி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
கூட்டத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது, பிடிவாரண்டு கைதிகளை கோர்ட்டில் ஆஜர் படுத்துவது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த விபத்து வழக்குகளில் காயமடைந்த 900 பேருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.30 கோடி இழப்பீட்டு தொகை வந்துள்ளது. இதனை, பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகி பெற்று செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதையடுத்து நடந்த கோர்ட்டு பணியாளர்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு பேசினார். இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டு பணி யாளர்களும் கலந்து கொண் டனர். முன்னதாக, நேற்று காலை வேடசந்தூர் கோர்ட் டில் நீதிபதி பிரகாஷ் ஆய்வு செய்தார். அங்கு பராமரிக் கப்படும் ஆவணங்கள் குறித்து கோர்ட்டு ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
இதற்கிடையே, வேடசந்தூர் வக்கீல்கள் சங்க தலைவர் முருகேசன், செயலாளர் பால முருகன் உள்ளிட்ட நிர்வாகி கள் அவரை சந்தித்தனர். அப்போது, நாங்கள் இதே போல ஆய்வுக்கு வருவதால் தான் வழக்குகள் குளறுபடி இல்லாமல் நடக்கும். வக்கில் களுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை நடக்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர்உடன் இருந்தார்.
Related Tags :
Next Story