அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் பங்கேற்ற ஆயத்த மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது.
திருச்சி,
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மக்களுக்கான அரசு போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 மற்றும் 9-ந்தேதிகளில் அகில இந்திய அளவில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான ஆயத்த மாநாடு மற்றும் கருத்தரங்கம் நேற்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. இந்த மாநாட்டுக்கு தொ.மு.ச. திருச்சி மண்டல தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது பற்றி தொ.மு.ச. மண்டல பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார். தொ.மு.ச. மாநில செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஆறுமுக நயினார், தொழிற்சங்க நிர்வாகிகள் குமாரபிரசாத், வேலுசாமி, பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
இந்த மாநாட்டில் திருச்சி, கும்பகோணம், நாகை, காரைக்குடி, புதுக்கோட்டை, கரூர் மண்டலங்களில் இருந்து ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சீனிவாசன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story