துக்காராம் முண்டே மீண்டும் பணி இடமாற்றம் : எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனராக நியமனம்
மீண்டும் பணி இடமாற்றம் செய்யப்பட்ட துக்காராம் முண்டே எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் மக்களிடையே நன்மதிப்பை பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி துக்காராம் முண்டே. நேர்மையாக செயல்படுவதால் இவருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எப்போதும் ஒத்துபோவது இல்லை.
இவர் நவிமும்பை மாநகராட்சி கமிஷனராக இருந்தபோது அங்குள்ள சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து இவருக்கு எதிராக நவிமும்பை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லா கட்சி கவுன்சிலர்களும் அவருக்கு எதிராக வாக்களித்தனர். எனினும் பொது மக்கள் துக்காராம் முண்டேக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டனர். அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருந்ததால் அவரது பணி இடமாற்றத்தை மாநில அரசு சிறிது காலம் நிறுத்தியிருந்தது. கடைசியில் வேறு வழியில்லாமல் அவரை புனே போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக நியமித்தது.
அங்கும் அவரது அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தது. தாமதமாக வேலைக்கு வந்த போக்குவரத்து ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தார். இதனால் அங்கு இருந்தும் மாற்றப்பட்டு நாசிக் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். ஆனால் அங்கும் அவருக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மாநில திட்டமிடல் இணை செயலாளராக மந்திராலயாவில் நியமிக்கப்பட்டார். ஆனால் இவர் அங்கு நியமிக்கப்பட்டது நிதித்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவாருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு மாதத்தில் தற்போது மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்ட இயக்குனராக துக்காராம் முண்டே நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான துக்காராம் முண்டே இதுவரை சுமார் 12 முறை பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
துக்காராம் முண்டே தவிர மேலும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஷீரடி சாய்பாபா சனஸ்தான் அறக்கட்டளை தலைவராக இருந்த ருபல் பரேக்கர் புனே மாநகராட்சி கூடுதல் கமிஷனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதே போல புனே கூடுதல் கமிஷனராக இருந்த ஷீத்தல் தெல்கி நாக்பூர் பெருநகர வளர்ச்சி குழும சேர்மனாக நியமிக்கப்பட்டார். புனே மாற்றுத்திறனாளி கமிஷனராக பாலாஜி மஞ்சுலே நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Tags :
Next Story