காங்கேயத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - சுற்றுலா செல்ல தந்தை பணம் கொடுக்காததால் விபரீத முடிவு
நண்பர்களுடன் சுற்றுலா செல்ல தந்தை பணம் கொடுக்காததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காங்கேயம்,
காங்கேயம்-தாராபுரம் ரோட்டில் உள்ள களிமேடு பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (வயது 50). இவர் காங்கேயம் அருகேயுள்ள காடையூரில் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி டெல்மா (45) அங்கன்வாடி அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன் தாமஸ்கிட்சன் (20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இதற்காக அவர் அங்கேயே தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு காங்கேயம் வந்துள்ள தாமஸ்கிட்சன், நண்பர்கள் சுற்றுலா செல்வதால் நானும் செல்கிறேன் செலவுக்கு பணம் வேண்டும் என்று தந்தையிடம் கேட்டுள் ளார். தற்போது எதற்கு சுற்றுலா செல்ல வேண்டும் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தந்தை மகனை சமாதானம் செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். தாமஸ் கிட்சன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதியம் சுமார் 1 மணியளவில் உறவுக்கார வாலிபர் ஒருவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தாமஸ் கிட்சன் தொங்கியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் டாக்டர் பரிசோதனை செய்து பார்த்து விட்டு தாமஸ்கிட்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல, தந்தை பணம் கொடுக்காத கோபத்தில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story