உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்


உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 30 Dec 2018 4:00 AM IST (Updated: 29 Dec 2018 9:38 PM IST)
t-max-icont-min-icon

உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

உயர் மின் கோபுரங்கள் நிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17-ந் தேதி முதல் திருவண்ணாமலை அருகே உள்ள தென்அரசம்பட்டு கிராமத்தில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தூக்கு கயிற்றை கழுத்தில் போட்டு கொண்டும், வாயில் கருப்பு துணி கட்டி கொண்டும், தலைகீழாக நின்ற படியும் பல்வேறு வகையான போராட்டங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளில் 5 பேர் கடந்த 23-ந் தேதி முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 27-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது சாட்டையால் அடிப்பது போன்றும், வாழை, நெல் போன்றவற்றின் மீது அடிப்பது போன்றும் செய்து காண்பித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் மட்டும் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் நேற்று 13-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மண்டியிட்டு மடியேந்தி பிச்சை எடுப்பது போன்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story