10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யவேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம்
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மீரான் மைதீன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோதர்மைதீன், ஜமாஅத்துல் உலமா சபை மூத்த தலைவர் சலாஹூத்தீன் ரியாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாட்டப்பத்து முகமது அலி வரவேற்று பேசினார். கூட்டத்தில், நாட்டில் உள்ள ஏழை -எளிய மக்களுக்கும், தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு வங்கிகளிலும், கூட்டுறவு வங்கிகளிலும், வட்டியில்லா கடன் வழங்கி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவி செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக் கும் 8 வழிச்சாலை திட்டம், மின்கோபுரங்கள், கியாஸ் குழாய் பதிக்கும் திட்டங்கள், மீத்தேன் திட்டம் ஆகியவற்றை மத்திய-மாநில அரசுகள் கைவிடவேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்காக அரசியல் கட்சியினர் குரல்கொடுக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். சிறுபான்மையினர் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களில் ஏற்படுகின்ற காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கானகத்து மீரான், நிர்வாகிகள் முகமதுஷாபி, மசூது, நாகூர்கனி, கமால்பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story