உத்தனப்பள்ளி அருகே சாலையை கடந்த காட்டு யானைகளால் பரபரப்பு
உத்தனப்பள்ளி அருகே சாலையை கடந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
ராயக்கோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்தன. அவைகள் சானமாவு, போடூர்பள்ளம், அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் பல குழுக்களாக பிரிந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் உத்தனப்பள்ளி அருகே உள்ள போடூர்பள்ளம் காட்டில் 45 யானைகள் முகாமிட்டிருந்தன.
அவைகள் நேற்று ராயக்கோட்டை சாலையை கடந்து சானமாவு காட்டிற்கு வந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. யானைகள் சாலையை கடந்ததால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையே ராயக்கோட்டை அருகே உள்ள ஊடேதுர்க்கம் காட்டில் இருந்து 20 யானைகள் துப்புகானப்பள்ளி ஏரி பகுதிக்கு நேற்று வந்தன.
பின்னர் இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தன. தற்போது 65 யானைகள் உத்தனப்பள்ளி அருகே முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வழியாக கர்நாடகாவிற்கு விரட்டிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story