குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேக விழா நாளை தொடங்குகிறது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 9.45 மணிக்கு 108 சங்கு அபிஷேகம், 108 கலச அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு அரசடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு உலக நன்மைக்காக யாகசாலை பூஜை, இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை, 9 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு கற்பூர ஜோதி வழிபாடு நடக்கிறது.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடக்கிறது. 6.45 மணிக்கு சிதம்பரேசுவரருக்கு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சிதம்பரேசுவரர் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரப்படுகிறது. காலை 7.30 மணிக்கு சந்தனகுடம் பவனி, 8 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.
தொடர்ந்து அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து 1,008 பால்குடம் எடுத்து வரப்பட்டு, முத்தாரம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. தொடர்ந்து மகுட இசை, வில்லிசை நடக்கிறது. மதியம் 3 மணிக்கு 108 சுமங்கலி பெண்கள் கும்மி வழிபாடு, மாலை 6 மணிக்கு 1,008 அகல் தீப வழிபாடு, இரவு 7.30 மணிக்கு புஷ்ப சகஸ்ரநாமாவளி அர்ச்சனை, இரவு 8.10 மணிக்கு பைரவருக்கு வடைமாலை அணிவித்து சிறப்பு பூஜை, இரவு 8.30 மணிக்கு அம்பாள் தேர் பவனி நடக்கிறது.
Related Tags :
Next Story