நாகர்கோவிலில் நசரேத் பசிலியான் இல்ல திருமணம்


நாகர்கோவிலில் நசரேத் பசிலியான் இல்ல திருமணம்
x
தினத்தந்தி 30 Dec 2018 3:45 AM IST (Updated: 30 Dec 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நசரேத் பசிலியான் இல்ல திருமணம் நடைபெற்றது.

நாகர்கோவில், 

கடியப்பட்டணம் நசரேத் பசிலியான்-எஸ்கலின் பசிலியான் தம்பதியின் மகன் மகேஷ்ராஜ் பசிலியானுக்கும், நாகர்கோவில் அல்போன்ஸ் பாபு-ஏஞ்சல் தம்பதியரின் மகள் விர்ஜின் சோனியாவுக்கும் நாகர்கோவிலில் உள்ள அசிசி வளாகத்தில் உள்ள திரு இருதய ஆலயத்தில் திருமணம் நடந்தது.

விழாவுக்கு நசரேத் சார்லஸ் முன்னிலை வகித்தார். கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை, முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், குழித்துறை ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் ஆகியோர் திருமண திருப்பலிக்கு தலைமை தாங்கினர். மரிய எஸ்ரோம், பிரியதர்ஷினி மேரி மகா எப்ரோம், ஆரிவ் கேபிரியல் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

மணமக்களை வாழ்த்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார். அதனை சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. மணமக்களிடம் வழங்கினார். தொடர்ந்து மணவிழா நிகழ்ச்சிகள் தேரேகால்புதூர் கங்கா கிராண்டியூரில் நடந்தது.

இதில் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், மாவட்ட அவைத்தலைவர் ஜோசப்ராஜ், மாநில மீனவரணி பெர்னார்டு. முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், நகர செயலாளர் மகேஷ், சிவராஜ், தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் தாமரை பாரதி, நெடுஞ்செழியன், சற்குரு கண்ணன், சிற்றார் ரவிச்சந்திரன், குட்டிராஜன், லிவிங்ஸ்டன், ரமேஷ்பாபு, நிர்வாகிகள் சுரேந்திரகுமார், ராஜரெத்தினம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story