தக்கலை அருகே பண்ணை வீட்டில் சூதாடிய 8 பேர் கைது சொகுசு கார், 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
தக்கலை அருகே பண்ணை வீட்டில் சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து ஒரு சொகுசு கார், 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
பத்மநாபபுரம்,
தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் தக்கலை அருகே மருந்துக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். மருந்துக்கோட்டை சானல்கரை பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. அதைதொடர்ந்து அங்கு சூதாடிய 8 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
விசாரணையில், அவர்கள் தக்கலை அப்பட்டுவிளை பகுதியை சேர்ந்த பண்ணை வீட்டு உரிமையாளரான ரமேஷ் (வயது 40), திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அகமது பஷீர் (52), சாதிக் (38), தக்கலை பகுதியை சேர்ந்த ஆரீப்(39), மாகின்(52), மெர்லின்ஜோஷ் (38), முட்டைக்காடு பகுதியை சேர்ந்த ஜெயசிங்(39), திட்டுவிளை பகுதியை சேர்ந்த பெஞ்சமின்(62) என்பதும், தொழிலதிபர்களான இவர்கள் பல மாதங்களாக பண்ணை வீட்டில் சூதாடி வந்ததும் தெரிய வந்தது.
அதைதொடர்ந்து ரமேஷ் உள்பட 8 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரத்து 400, 6 மோட்டார் சைக்கிள்கள், ஒரு சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story