வெள்ளரிக்காய் வாங்குவது போல நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு


வெள்ளரிக்காய் வாங்குவது போல நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 30 Dec 2018 3:45 AM IST (Updated: 30 Dec 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே வெள்ளரிக்காய் வாங்குவது போல நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்.

திருப்புவனம், 

திருப்புவனம் அருகே உள்ள பழையனூர் போலீஸ்சரகத்தை சேர்ந்தது சங்கங்குளம் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் ராமையா மனைவி லட்சுமி (வயது 65). இவர் அங்குள்ள நெடுஞ்சாலை அருகே உள்ள தனது தோட்டத்தில் விளைந்த வெள்ளரிக்காய்களை பறித்து, அதை ரோட்டின் ஓரம் நின்று விற்றுக்கொண்டிருந்தார். 

அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் வெள்ளரிக்காய் வாங்குவது போல நடித்து திடீரென அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Next Story