பன்றிக்காய்ச்சலால் மரணம்: ஐ.பி.எஸ். அதிகாரி மதுகர் ஷெட்டியின் உடலுக்கு மந்திரி, உயர் அதிகாரிகள் அஞ்சலி
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த ஐ.பி.எஸ். அதிகாரி மதுகர் ஷெட்டியின் உடல் நேற்று பெங்களூரு கொண்டு வரப்பட்டது. அவருடைய உடலுக்கு போலீஸ் மந்திரி எம்.பி. பட்டீல் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அவருடைய உடல் இன்று(ஞாயிற்றுக் கிழமை) உடுப்பியில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
பெங்களூரு,
உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் மதுகர் ஷெட்டி(வயது 47). 1999-ம் ஆண்டு ஐ.பி.எஸ். ஆக பணியில் சேர்ந்த இவர், கர்நாடகத்தில் லோக்ஆயுக்தா பிரிவில் பணி செய்து கனிம சுரங்க முறைகேடுகளை விசாரித்தார். சிக்கமகளூரு போலீஸ் சூப்பிரண்டாக அவர் இருந்தபோது அரசு நிலம் மீட்பில் தீவிரம் காட்டினார். சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் குழுவில் இடம் பெற்று இருந்ததோடு, நக்சல் ஒழிப்பு படை உள்பட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றினார்.
பின்னர், மத்திய அரசு பணிக்கு இ்டமாறுதல் பெற்ற அவர் ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் பயிற்சி மையத்தின் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவருடைய உடல் விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அவருடைய உடல் எலகங்காவில் உள்ள ஆயுதப்படை போலீஸ் பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மதுகர் ஷெட்டியின் உடலுக்கு போலீஸ் துறை மந்திரி எம்.பி.பட்டீல், போலீஸ் டி.ஜி.பி. நீலமணி என்.ராஜூ, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார், பெங்களூரு மாநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் உள்பட உயர் அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை உள்பட பலர் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) உடுப்பியில் வைத்து மதுகர் ஷெட்டியின் உடலுக்கு அவருடைய குடும்ப சம்பிரதாயப்படி முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதையடுத்து அவருடைய உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Related Tags :
Next Story