புத்தாண்டையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கை : மும்பையில் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலியாக மும்பையில் புத்தாண்டையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஓட்டல், விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மும்பை,
நிதி தலைநகரான மும்பை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.
ஏற்கனவே 70 சதவீத ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்ட முன்பதிவு முடிந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதவிர கேட்வே ஆப் இந்தியா, மெரின் டிரைவ், ஜூகு, சிவாஜி பார்க் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் புத்தாண்டை வரவேற்க பொது மக்கள் அதிகளவில் கூடுவார்கள்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக மும்பை நகர தெருக்களில் தோரணங்கள், மின்விளக்கு அலங்கார வேலைகள் நடப்பதை பார்க்க முடிகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை ஓட்டல், மதுபான விடுதிகளில் மது பரிமாறவும், சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை வரவேற்க மக்கள் ஒருபக்கம் தயாராகி வரும் அதேவேளையில், பயங்கரவாதிகளின் கழுகு பார்வையில் இருந்து வரும் மும்பை நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க போலீசாா் தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் மும்பையில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி இருப்பவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
புத்தாண்டு தினத்தன்று நகரின் முக்கிய சந்திப்புகள், கிழக்கு மற்றும் விரைவு சாலை, கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர். மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை தடுக்க போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். முன்னதாக மதுகுடித்தவரை தனியாக வாகனங்களில் செல்ல அனுமதிக்க கூடாது என ஏற்கனவே மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
புத்தாண்டு தினத்தன்று பொதுமக்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. அதிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மட்டும் மும்பையில் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை, கலவர தடுப்பு பிரிவு, மாநில ரிசர்வ் படை போலீசார் என மொத்தம் 50 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். இதற்காக திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை போலீசாரின் வார விடுமுறை கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த நாளில் போலீசார் யாரும் விடுமுறை எடுக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு பாதுகாப்பு பணிகள் குறித்து மும்பை போலீஸ் உதவி கமிஷனர் மஞ்சுநாத் சிங்கே கூறியதாவது:-
கடற்கரை மற்றும் நட்சத்திர ஓட்டல் கார் நிறுத்தும் இடங்கள், மதுபான விடுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். சிறப்பு பிரிவினர், சாதாரண உடை போலீசார் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குழுவினரும் எல்லா இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story