ஓட்ஸ் பால் பருகுங்கள்!
வழக்கமாக பருகும் பாலுக்கு மாற்றாக ஓட்ஸை பாலாக தயாரித்து பருகலாம். ஒரு கப் ஓட்ஸ் பாலில் 35 சதவீதம் கால்சியம், 25 சதவீதம் வைட்டமின் டி சத்து நிறைந்திருக்கிறது.
வழக்கமாக பருகும் பாலுக்கு மாற்றாக ஓட்ஸை பாலாக தயாரித்து பருகலாம். ஒரு கப் ஓட்ஸ் பாலில் 35 சதவீதம் கால்சியம், 25 சதவீதம் வைட்டமின் டி சத்து நிறைந்திருக்கிறது. பசும் பாலை விட இதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது. கலோரியும் குறைவான அளவில்தான் உள்ளது. பசும் பாலை விட இதில் கால்சியமும் அதிகம் கலந்திருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை உணவுடன் ஓட்ஸ் பால் பருகி வரலாம். மற்ற பாலை விட இதில் நார்ச்சத்தும் அதிகம் நிறைந்திருக்கிறது. பசியை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
ஓட்ஸ் பால் தயாரிப்பதும் எளிமையானது. ஒரு கப் ஓட்ஸை அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுடன் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் மூன்று கப் தண்ணீர், கல் உப்பு சேர்த்து கலக்க வேண்டும். ஓட்ஸ், தண்ணீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இறுதியில் துணியில் வடிகட்டி பருகலாம். இந்த ஓட்ஸ் பாலை 5 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஓட்ஸ் பாலுடன் தேன் கலந்தும் பருகலாம்.
Related Tags :
Next Story