உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: முகத்தை துணியால் மறைத்து முக்காடு போட்டு விவசாயிகள் போராட்டம்
உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாழப்பாடியில் முக்காடு போட்டு, முகத்தை துணியால் மறைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
வாழப்பாடி,
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணமலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்களுக்கான திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டது. அதனை எதிர்த்து தமிழகத்தில் 8 இடங்களில் கடந்த 17-ந்தேதி முதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் வெவ்வேறு போராட்டங்களை நடத்தினர்.
நேற்று 14-வது நாளில் அனைத்து பகுதிகளிலும் போராட்டத்தை கைவிட்டு வருகிற ஜனவரி 3-ந்தேதி சென்னை சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாகவும் விவசாயிகள் அறிவிப்பு வெளியிட்டனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி சேசன்சாவடியில் காத்திருப்பு போராட்டத்தின் இறுதி நாளான நேற்று தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் முகத்தை துணியால் மறைத்து, முக்காடு போட்டு நூதன போராட்டம் நடத்தினர். விவசாயிகள் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. பின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
Related Tags :
Next Story