கோவையில் பஸ் மோதி பிளஸ்-2 மாணவர் பலி - மற்றொரு விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு


கோவையில் பஸ் மோதி பிளஸ்-2 மாணவர் பலி - மற்றொரு விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 31 Dec 2018 3:45 AM IST (Updated: 31 Dec 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பஸ் மோதி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

கோவை, 

கோவை வீரகேரளத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் அக்‌ஷய கீர்த்தி (வயது 17). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் அக்‌ஷய கீர்த்தி பாரதியார் ரோட்டில் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது காந்திபுரத்தில் இருந்து ஒண்டிப்புதூரை நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக அவ ருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அக்‌ஷய கீர்த்தி தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் பஸ் டிரைவரான மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (34) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோவை காந்திபுரம் டாடாபாத் பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவருடைய மகன் திலீப்குமார் (24). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 28-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் மரக்கடை மில் ரோட்டில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த குப்பை தொட்டியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த திலீப்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.


Next Story