ஸ்ரீபெரும்புதூரில் குடிகாரர்களின் புகலிடமாக மாறிய கால்நடை மருத்துவமனை


ஸ்ரீபெரும்புதூரில் குடிகாரர்களின் புகலிடமாக மாறிய கால்நடை மருத்துவமனை
x
தினத்தந்தி 31 Dec 2018 4:00 AM IST (Updated: 31 Dec 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூரில் கால்நடை மருத்துவமனை குடிகாரர்களின் புகலிடமாக மாறியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது. இரவு நேரங்கில் இங்கு வரும் சமூக விரோதிகள் மது குடிப்பதோடு சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இதனால் கால்நடை மருந்தகத்தை சுற்றிலும் காலி மதுபாட்டில்களும், தண்ணீர் பாக்கெட்டுகளும் சிதறி கிடக்கின்றன.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
இரவு 10 மணிக்கு மேல் இங்கு வரும் சமூக விரோதிகள் மது குடிப்பதுடன் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இரவில் மின்சார விளக்குகளும் எரியாததால் அதை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். குடிகாரர்களின் புகலிடமாக மாறியுள்ள இந்த மருத்துவமனை வளாகத்தில் பழுதடைந்த கட்டிடம் ஒன்றும் உள்ளது.

அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story