தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி


தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 31 Dec 2018 3:56 AM IST (Updated: 31 Dec 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட தி.மு.க. 15-வது அமைப்பு தேர்தல் நடைபெற இருப்பதால் கட்சியினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தலைமையில் அரியலூரில் நடந்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட தி.மு.க. 15-வது அமைப்பு தேர்தல் நடைபெற இருப்பதால் கட்சியினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தலைமையில் அரியலூரில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் துணை செயலாளர் அப்துல்லா கலந்து கொண்டு உறுப்பினர் அட்டைகளை முன்னாள் எம்.பி. சிவசுப்பிரமணியனிடம் வழங்கினார். இதில் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட அவைத்தலைவர் துரைராஜ், நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இதே போல் தா.பழூரில் நடந்த நிகழ்ச்சியில் அப்துல்லா கலந்து கொண்டு தா.பழூர்-கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 16 ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து கிளைகளை சேர்ந்த தி.மு.க.வினருக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். முன்னதாக ஒன்றிய கழக பொறுப்பாளர் க.சொ.க.கண்ணன் வரவேற்றார். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை நன்றி கூறினார். 

Next Story