மின்வாரிய உதவிபொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 6 மையங்களில் நடந்தது
மின் வாரிய உதவி பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு திருச்சியில் 6 மையங்களில் நடந்தது.
திருச்சி,
தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. திருச்சி மண்டலத்தை பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகம், சாரநாதன் பொறியியல் கல்லூரி, ஜெ. ஜெ. பொறியியல் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி உள்பட 6 கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 5 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர்.
அவர்களில் 1,406 பேர் நேற்று தேர்வு எழுத வரவில்லை. 3,594 பேர் தேர்வு எழுதினர்.
எல்லா தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. என்ஜினீயரிங் முடித்த பெண்களும் பெருமளவில் தேர்வு எழுதினார்கள். கைக்குழந்தையுடன் வந்தவர்கள் தங்களது கைக்குழந்தையை வெளியில் தங்களது கணவர் அல்லது பெற்றோரிடம் கொடுத்து விட்டு சென்றனர். வெளியில் காத்து இருந்த அவர்கள் கைக்குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொண்டனர்.

Related Tags :
Next Story