புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு


புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 31 Dec 2018 4:00 AM IST (Updated: 31 Dec 2018 4:55 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

ஊட்டி,

டிசம்பர் மாதம் 31-ந் தேதி முடிந்த பின்னர், ஜனவரி மாதம் 1-ந் தேதி 2019-ம் ஆண்டு புதுவருடம் பிறக்கிறது. புத்தாண்டை முன்னிட்டு சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான ஊட்டிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தருவார்கள். அவர்களது புத்தாண்டு கொண்டாட்டம் மகிழ்ச்சியாக இருப்பதோடு, பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவின் படி, விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க ஊட்டி-கூடலூர் சாலையில் சூட்டிங்மட்டம் பகுதி, குன்னூர் லெவல்கிராசிங் பகுதி, கூடலூர் பஜார் ஆகிய 3 இடங்களில் தற்காலிகமாக சாமியானா பந்தல் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வேகமாக இயக்கி வருபவர்களை தடுத்து நிறுத்தி, வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது, மிதமான வேககே பாதுகாப்பான பயணம் என்று போலீசார் ஆலோசனை வழங்குகிறார்கள்.

இன்று (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு மேல் ஓட்டல்களில் பார் இயங்கக்கூடாது என்று ஓட்டல் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரவு 11 மணிக்கு பிறகு தங்கும் விடுதிகளில் பாடல், இசை போன்றவை மற்றவர்களுக்கு இடையூறாக எழுப்பக்கூடாது. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் ஊட்டி நகரில் சாலையில் விழா கொண்டாடக்கூடாது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள நாடுகாணி, தெப்பக்காடு, எருமாடு, அய்யங்கொல்லி, முள்ளி, பர்லியார், பாட்டவயல், கக்கனல்லா உள்பட மொத்தம் 16 சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வாகனங்கள் சோதனைக்கு பின்னரே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது. நீலகிரியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற இருப்பதால், ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

Next Story