நெல்லை அறிவியல் மையத்தில் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த வினாடி-வினா போட்டி
நெல்லை அறிவியல் மையத்தில் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த வினாடி-வினா போட்டி நேற்று நடந்தது.
நெல்லை,
நெல்லை மாவட்ட அறிவியல் மையம், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், ஏட்ரீ அமைப்பு ஆகியவை இணைந்து வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘வனம் மற்றும் அங்கு வாழும் உயிரினங்களை காப்பதன் அவசியம்‘ என்ற தலைப்பில் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் சேர்ந்து எழுதக்கூடிய எழுத்துதேர்வு மற்றும் வினாடி-வினா போட்டி நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று நடந்தது. அறிவியல் மைய அலுவலர் குமார் தலைமை தாங்கினார். நம்பிராஜன் போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் ஒரு மாணவன் மற்றும் அவனுடைய தாத்தா, பாட்டி, அல்லது தாய், தந்தை யாராவது ஒருவர் அவனுடன் கலந்து கொண்டு இந்த போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
இதன்படி பல குடும்பத்தினர் வந்து எழுத்து தேர்வு மற்றும் வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் முதல் 6 இடங்களை பிடித்த குழுவினரை தேர்ந்து எடுக்கப்பட்டனர். இந்த குழுவினர் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகப்பகுதிக்கு அழைத்து சென்று சுற்றிக்காட்டப்படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story