பாம்பன் ரோடு பாலத்தில் வாகனங்களை நிறுத்தினால் ரூ.600 அபராதம்; நாளை முதல் அமலுக்கு வருகிறது
பாம்பன் ரோடு பாலத்தில் வாகனங்களை நிறுத்தினால் ரூ.600 அபராதம் விதிக்கப்படும். இது நாளை முதல் அமலுக்குவருகிறது என்று மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.புண்ணிய தலமான ராமேசுவரத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்து கார்,வேன் உள்ளிட்ட பல வாகனங்கள் மூலம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் ரோடு பாலத்தில் இறங்கி நின்று ரெயில்,ரோடு பாலத்தை பார்த்து ரசித்து விட்டு தான் செல்வார்கள்.
இவ்வாறு சுற்றுலா பயணிகள் வரும் சுற்றுலா பஸ்,கார்,வேன் உள்ளிட்ட வாகனங்கள் ரோடு பாலத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.அதிலும் விடுமுறை நாட்களில் ரோடு பாலம் முழுவதும் சுற்றுலா வகனங்கள் நிறு த்தப்பட்டு வருவதால் அரசு பஸ் உள்ளிட்ட எந்தவொரு வாகனமும் செல்ல முடியாத அளவில் கடும் போக்குவரத்து நெருக்கடி எற்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்கவும், சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தையும் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது வருவாய் கோட்டாட்சியர் சுமன்,வட்டார போக்குவர த்து அதிகாரி செல்வகுமார்,போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்,தேசியநெடுஞ் சாலைதுறை உதவிகோட்டபொறியாளர் மாரியப்பன்,தாசில்தார் அப்துல்ஜபார்,மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணாதுரை,நகராட்சி ஆணையாளர் வீரமுத்துகுமார்,போக்குவரத்து ஆய்வாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:– ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் கடலில் அமைந்துள்ள ரோடு பாலத்தை பார்க்கும் ஒரு ஆர்வத்தில் வாகனங்களை நிறத்தி விடுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம்,காவல்துறை,தேசிய நெடுஞ்சாலைதுறை என பல துறைகளை ஒரு ங்கிணைத்து ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி 1–ந்தேதி முதல் பாம்பன் ரோடு பாலத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தக்கூடாது. மீறி நிறுத்தினால் அந்த வாகனத்திற்கு காவல் துறை மூலம் உடனடி அபராதமாக ரூ.600 விதிக்கப்படும். போக்குவரத்து ஆய்வாளர்,வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் உள்ளி ட்ட 35 பேர் ரோடு பாலத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கண் காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படஉள்ளது.சுற்றுலா வகனங்கள் நிறுத்த வசதியாக ரோடு பாலத்தின் இருபுறமும் நுழைவு பகுதியில் வாகனத்தை நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ரோடு பாலத்தில் 100 மீட்டர் இடை வெளியில் சுற்றுலா பயணிகளை இறக்கி விட்டு விட்டு வாகனங்களை நிறுத்தாமல் செல்லலாம்.இந்த நடைமுறை 1–ந் தேதி முதல் அமலுக்கு வரு கிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ராமேசுவரத்திலும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்து வாகனங்கள் ஒரு வழியாக வந்து வேறு வழியாக செல்ல திட்டம் குறித்து ஆலேசானை செய்து வருகிறோம். விரைவில் அந்த திட்டமும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.