மதுரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிக்கு 3 குழுக்கள்; கலெக்டர் தகவல்


மதுரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிக்கு 3 குழுக்கள்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 31 Dec 2018 5:38 AM IST (Updated: 31 Dec 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிக்கு 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை,

தமிழகம் முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த வருவாய், உள்ளாட்சி, காவல்துறைகளின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுக்களின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பிளாஸ்டிக்கை ஒழிப்பு பணிக்கு மதுரை மாவட்டத்தில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுக்கள் சிறப்பாக பணியாற்றி பிளாஸ்டிக் மாசில்லா மதுரையை உருவாக்க வேண்டும் எனவும் கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராஜசேகரன், வானதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல என்ஜினீயர் விஜயபாஸ்கரன், மாநகராட்சி துணை ஆணையாளர் மணிவண்ணன் மற்றும் பேரூராட்சி, நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story