ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் துணிகள் திருட்டு போலீசார் விசாரணை


ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் துணிகள் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 Jan 2019 3:45 AM IST (Updated: 1 Jan 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

மாட்லாம்பட்டியில் ஜவுளிகடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 39). ஜவுளி வியாபாரி. இவர் மாட்லாம்பட்டி பிரிவு ரோட்டருகே உள்ள வாடகை கட்டிடத்தில் ரெடிமேடு ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் இவரும், இவருடைய தந்தை சென்னைய செட்டியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை சென்னையசெட்டி கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், மகன் அருண்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்த போது மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜவுளிக்கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது மர்ம ஆசாமிகள் கடையின் பின்புறமாக சுவரில் துளைபோட்டு திருட முயற்சி செய்து இருப்பதும், அது முடியாமல் போனதால் பூட்டை உடைத்து ஆடைகளை திருடிச்சென்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் வழக்குப்பதிவு செய்து துணிகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் மாட்லாம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story