மதுரவாயலில் 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரம் கொள்ளை


மதுரவாயலில் 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரம் கொள்ளை
x
தினத்தந்தி 1 Jan 2019 3:15 AM IST (Updated: 1 Jan 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

மதுரவாயலை அடுத்த வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை, டிஜிட்டல் பேனர் மற்றும் ஒரு பெட்டி கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர்.

பூந்தமல்லி,

அப்போது கடைகளின் ஷட்டர்களில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது 3 கடைகளிலும் இருந்த கல்லா பெட்டிகள் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த மூன்று கடைகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.48 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர்களான சீனிவாசன், சுரேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டுகளை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story