மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில்90 சதவீத மணல் கடத்தல் குறைந்துள்ளதுபோலீஸ் சூப்பிரண்டு பேட்டி + "||" + Thiruvannamalai district 90 percent of sand smuggling declined Police interviewed superstar

திருவண்ணாமலை மாவட்டத்தில்90 சதவீத மணல் கடத்தல் குறைந்துள்ளதுபோலீஸ் சூப்பிரண்டு பேட்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில்90 சதவீத மணல் கடத்தல் குறைந்துள்ளதுபோலீஸ் சூப்பிரண்டு பேட்டி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 90 சதவீத மணல் கடத்தல் குறைந்துள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி கூறினார்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

திருவண்ணாமலை மாவட் டத்தில் கடந்த 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் 90 சதவீத மணல் கடத்தல் குறைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 1,040 வழக்குகள் பதியப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1,043 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் 621 மாட்டு வண்டிகள், 162 லாரிகள், 186 டிராக்டர்கள், 15 பொக்லைன் எந்திரங்கள் உள்பட 1,062 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உடனுக்குடன் விடுவிக்கப்பட்டு வந்தது. தற்போது பறிமுதல் செய்யப் பட்ட வாகனங்கள் விடுவிக்க சட்ட நடைமுறைகள் உள்ள தால் மணல் கடத்துபவர்கள் திணறி வருகின்றனர். மேலும் தொடர்ந்து மணல் கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் படியும் கைது நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.


2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. 2017 -ம் ஆண்டு 54 கொலை சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இதில் 6 ஆதாய கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2018-ம் ஆண்டில் 40 கொலைகள் மட்டுமே நடந்துள்ளது. இதில் ஒரு ஆதாய கொலை தான். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி முதல் நேற்று வரை 56 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ள னர்.

கடந்த ஜனவரி முதல் இது வரை 356 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 301 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 75 சதவீத களவாடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது.

2018-ம் ஆண்டில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்களில் 43 ஆயிரத்து 358 பேருக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசாரை வாகன சோதனையில் ஈடுபட அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரை அதிகப்படுத்த வும், சைரன் வைத்த மோட்டார் சைக்கிள்களை அதிகப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டம் முழுவதும் வாகனங்களில் மணல் கடத்தல் அதிகரிப்பு கடும் நடவடிக்கை தேவை
மாவட்டம் முழுவதும் வாகனங்களில் மணல் கடத்தல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
2. கொளத்தூர் அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீசார் விரட்டியதால் காவிரி ஆற்றில் குதித்தவர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
கொளத்தூர் அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீசார் விரட்டியதால் காவிரி ஆற்றில் குதித்தவரின் கதி என்ன? மேலும் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
3. நெல்லிக்குப்பம் பகுதியில், மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 15 பேர் கைது
நெல்லிக்குப்பம் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. பண்ருட்டி பகுதியில் மணல் கடத்தல்; 11 பேர் கைது
பண்ருட்டி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தல்; 6பேர் கைது 2 லாரிகள் பறிமுதல்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 2 லாரிகளில் மணல் கடத்தி வந்த 6 பேரை போலீசார் கைது செய் தனர். லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.