உயிர் வேதியியல் ஆராய்ச்சியை மேம்படுத்த புதுவை பல்கலைக்கழகத்துக்கு ரூ.1½ கோடி நிதி உதவி; மத்திய அரசு ஒப்புதல்
புதுவை பல்கலைக்கழகத்துக்கு உயிர் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை மேம்படுத்த ரூ.1½ கோடி நிதி உதவிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி மத்திய பல் கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை உயர்கல்வியில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு நிதி உதவிகளை அளித்து ஆராய்ச்சிகளை மேம்படுத்தி வருகிறது. அதன்படி புதுவை பல் கலைக்கழகத்தில் இயங்கி வரும் உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறைக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை 1.49 கோடி (இரண்டாம் நிலை) நிதி உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக புதுவை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ஆராய்ச்சி மேம்பாட்டு நிதி உதவியில் இருந்து உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையில் எம்.எஸ்.சி. பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்ற மாணவர்களுக்கு தேவையான பன்னாட்டு தரத்திலான அல்ட்ரா சென்டிரிவியுஜ் மற்றும் ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர் போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான ஆய்வு கூடத்திற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய முடியும்.
மேலும் இந்த நிதியை பயன்படுத்தி குளிரூட்டப்பட்ட ஆய்வுக்கூடங்களையும், திசு பாதுகாப்பு அறைகள் மற்றும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஆய்வகங்களையும் புதிதாக நிறுவ முடியும். உலக தரத்திலான ஆய்வுகளில் புதிய யுத்திகளை கையாண்டு அரிய ஆராய்ச்சிகளை கண்டுபிடித்தால் தொடர் ஆராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவி தொடர்ந்து இந்த துறைக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்த நிதி இரண்டு முறை பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. அதோடு மத்திய அரசின் நிதி நல்கைக்குழுவும் (யு.ஜி.சி.) ஆராய்ச்சிகளை மேம்படுத்த இதே துறைக்கு ஏற்கனவே சிறப்பு கூறுத்திட்டத்தின் கீழ் நிதி உதவியை அளித்துள்ளது.
இந்த துறையில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றவர்களில் பலர் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதற்காக தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கற்பித்தல், உயர்கல்வி மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்காக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் நிதி உதவிக்கான ஒப்புதல் கிடைத்ததற்கு துறை தலைவர் மற்றும் பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story