புத்தூரில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
புத்தூரில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்துபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மங்களூரு,
புத்தூரில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்துபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுப்பெண்
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா ஹிரேபண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா. இவர் புத்தூரில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 10 மாதங்ளுக்கு முன்பு பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் திவ்யா, ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் திவ்யா நேற்று முன்தினம் ஹிரேபண்டாடி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.
தற்கொலை
நேற்று காலை திவ்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த சமயத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் வெளியே சென்றிருந்த திவ்யாவின் பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது திவ்யா வாயில் நுரை தள்ளியப்படி கீழே கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர், திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக புத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், திவ்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் திவ்யாவின் உடலை பார்த்து அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர்.
காரணம் என்ன?
இதற்கிடையே, தங்கள் மகள் சாவுக்கு அவளுடைய கணவரின் குடும்பத்தினர் தான் காரணம் என திவ்யாவின் பெற்றோர் புத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனாலும் திவ்யாவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story