ஜி.எஸ்.டி. வரி மாற்றத்தால் புதுச்சேரி தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைந்தது
ஜி.எஸ்.டி. வரி மாற்றத்தால் புதுவையில் உள்ள தியேட்டர்களில் சினிமா கட்டணம் குறைக்கப் பட்டது.
புதுச்சேரி,
சரக்கு சேவை வரி விதிப்பில் மத்திய அரசு சமீபத்தில் மாற்றங்கள் செய்தது. டி.வி., கம்ப்யூட்டர் மானிட்டர், வீடியோ கேம் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது. ரூ.100-க்கு அதிகமான சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் ரூ.100-க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு இருந்தது.
புதிய வரி மாற்றத்தின்படி சினிமா டிக்கெட்டுகள் மீதான வரியும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுச்சேரியில் உள்ள தியேட்டர் களில் நேற்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் உள்ள தியேட்டர்களில் குறைக்கப்பட்ட புதிய கட்டண விவரம் (பழைய கட்டணம் அடைப்புக் குறிக்குள்) வருமாறு:- ரூ.135 (ரூ.150), ரூ.108 (ரூ.120), ரூ.94 (ரூ.100) என வசூலிக்கப்பட்டது. ரூ.80, ரூ.60, ரூ.50 என்று ஆகிய கட்டணங்களில் 12 சதவீதம் குறைக்கப்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.160 ஆக இருந்த கட்டணம் ரூ.130 ஆகவும் ரூ.150 ஆக இருந்த கட்டணம் ரூ.120 ஆகவும் குறைந்தது.
மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் முதல் வகுப்பு கட்டணம் ரூ.190.78 ஆகவும் 2-ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் ரூ.60.12 ஆகவும் குறைக்கப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் நேற்று டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது. அதாவது ரூ.160 டிக்கெட் ரூ.148 ஆகவும், ரூ.105 ஆக இருந்த கட்டணம் ரூ.100 எனவும், ரூ.80 கட்டணம் ரூ.76 ஆகவும், ரூ.50 டிக்கெட் ரூ.47 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story