புளியங்குடி அருகே, பஸ் மோதி கிறிஸ்தவ ஆலய ஊழியர் பலி- மற்றொரு விபத்தில் வாலிபர் சாவு


புளியங்குடி அருகே, பஸ் மோதி கிறிஸ்தவ ஆலய ஊழியர் பலி- மற்றொரு விபத்தில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 2 Jan 2019 3:30 AM IST (Updated: 2 Jan 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே பஸ் மோதி கிறிஸ்தவ ஆலய ஊழியர் பலியானார். மற்றொரு விபத்தில் வாலிபர் இறந்தார்.

புளியங்குடி, 

புளியங்குடி அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ஐசக் (வயது 65). இவர் அங்குள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் ஊழியராக உள்ளார். இவர் நேற்று மாலையில் கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அங்குள்ள சாலையை அவர் கடக்க முயன்றார். அப்போது ராஜபாளையத்தில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஐசக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான ஐசக் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


மானூரை அடுத்துள்ள சுண்டங்குறிச்சியை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் கலையரசன் (23).
இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில்-நெல்லை மெயின் ரோட்டில் மானூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கானார்பட்டி விலக்கு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கலையரசன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story