வானவில் : எதிர்காலத்தின் வாகனம் ‘பறக்கும் கார்’
ஒரு சில நொடிகளில் ஒரு சிறிய சைஸ் விமானம் ஒன்று காராக மாறினால் எப்படி இருக்கும்? கிராபிக்ஸ் காட்சியில் வேண்டுமானால் சாத்தியம் என்று தானே நினைக்கிறீர்கள்.
நிஜமாகவே இப்படி ஒரு வாகனத்தை உருவாக்கி இருக்கின்றனர் நிபுணர்கள். தரையில் நிற்கும் போது நான்கு பேர் அமரக் கூடிய சாதாரண கார் போன்று இருக்கும் இதை நமக்கு வேண்டிய பொழுது விமானமாக மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இருபுறமிருந்தும் பறவை இறக்கையை விரிப்பது போன்று தனது மின் இறக்கைகளை விரித்து கொண்டு இந்த கார் சட்டென்று விமானமாக மாறுகிறது. 300 ஹெச்.பி. சக்தி வாய்ந்த என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள காற்றாடி போன்ற அமைப்பு உந்துசக்தியை அளித்து பறக்க உதவுகிறது. மணிக்கு 200 மைல் வேகத்தில் பறக்கலாம். 500 மைல் வரை இந்த குட்டி விமானத்தில் பறக்கலாம்.
தரை இறங்குவதற்கு பிரத்யேகமான ஓடுதளம் எதுவும் தேவையில்லை. எந்த விதமான தரைப்பரப்பிலும் இறங்கும். தரையில் இறங்கியவுடன் இறக்கைகளை மடக்கி காராக மாறிவிடும். சாதாரண கார்களை போல சாலையிலும் ஓட்டலாம். பெரிய விமானங்களில் பயணம் செய்ய அஞ்சுபவர்கள் கூட இந்த குட்டி கார் விமானத்தில் தைரியமாக பறந்து சுற்றலாம்.
போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இது போன்று பறக்கும் கார்கள் வரவிருக்கின்றனவாம். ‘எதிர்காலத்தின் வாகனம்’ என்று இதனை அழைக்கின்றனர்.
Related Tags :
Next Story