வானவில் : ஏ.பி.எஸ்., சி.பி.எஸ். வசதிகளுடன் ஸ்கூட்டர்கள்


வானவில் : ஏ.பி.எஸ்., சி.பி.எஸ். வசதிகளுடன் ஸ்கூட்டர்கள்
x
தினத்தந்தி 2 Jan 2019 3:21 PM IST (Updated: 2 Jan 2019 3:21 PM IST)
t-max-icont-min-icon

ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்களின் ஸ்திரத் தன்மையை உறுதி செய்யும் வகையில் 125 சி.சி. உள்பட்ட வாகனங்களில் சி.பி.எஸ். (கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம்) மற்றும் 125 சி.சி. திறனுக்கு மேம்பட்ட வாகனங்களில் ஏ.பி.எஸ். (ஆன்ட்டி பிரேக்கிங் சிஸ்டம்) வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் இது கட்டாயம். ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பியாஜியோ நிறுவனம் தனது அப்ரிலியா மாடல் மற்றும் பியாஜியோ ஸ்கூட்டர்களில் ஏ.பி.எஸ்., சி.பி.எஸ். பிரேக்கிங் வசதி கொண்ட மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அப்ரிலியா 150 சி.சி. மாடலில் ஏ.பி.எஸ். பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல வெஸ்பா வி.எக்ஸ்.எல். 150 ஏ.பி.எஸ். மாடல் விலை ரூ. 98,310 விலை ஆகும். எஸ்.எக்ஸ்.எல். 150 ஏ.பி.எஸ். மாடல் விலை ரூ. 1.02 லட்சம், எஸ்.எக்ஸ்.எல். 150 ரெட் ரூ. 1.03 லட்சம். எலகன்ஸ் 150 ஏ.பி.எஸ். ரூ.1.08 லட்சம்.

அப்ரிலியா எஸ்.ஆர் .150 விலை ரூ. 80,850 ஆகும். எஸ்.ஆர். 150 கார்ன் ஏ.பி.எஸ். ரூ. 82,550, எஸ்.ஆர். 150 ரேஸ் ஏ.பி.எஸ். ரூ. 89,550 ஆகும். அதாவது முந்தைய மாடல்களின் விலையோடு ஒப்பிடுகையில் ரூ. 10 ஆயிரம் வரை கூடுதலாக இருக்கும்.

இதில் 125 சி.சி. வகை விலையில் பெரிதும் மாறுதல் ஏதும் செய்யப்படவில்லை. அதாவது விலை உயர்வு இல்லை. சி.பி.எஸ். உள்ள அப்ரிலியா எஸ்.ஆர். 125 சி.பி.எஸ். விலை ரூ. 69,250. முந்தைய மாடல் விலை ரூ.66 ஆயிரமாகும். இதேபோல வெஸ்பா வி.எக்ஸ்.எல். 125 சி.பி.எஸ். மாடல் ரூ. 88,250, வெஸ்பா எஸ்.எக்ஸ்.எல். 125 சி.பி.எஸ். விலை ரூ.91,450 ஆகும். வெஸ்பா எஸ்.எக்ஸ்.எல். 125 ரெட் சி.பி.எஸ். விலை ரூ. 92,500. இந்தப் பிரிவில் ரூ. 3 ஆயிரம் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள விலை விவரம் மும்பை நகரின் விலையை அடிப்படையாக கொண்டது. டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விலையில் சற்று மாறுபடும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Next Story