வானவில் : வருகிறது 5 ஜி போன்
கடந்த சில ஆண்டுகளில் மொபைல் போன்களின் வளர்ச்சி அபரிமிதமானது. தற்சமயம் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.
இளையதலைமுறையினரைப் பொருத்தமட்டில் அனைவர் கையிலும் நான்காம் தலைமுறை அலைபேசியான 4ஜி ஸ்மார்ட் போன் ஆறாம் விரலாகி விட்டது. இந்த நிலையில் ஐந்தாம் தலைமுறை அலைபேசியான 5 ஜி ஸ்மார்ட்போன் அடுத்த சில மாதங்களில் அறிமுகமாக இருக்கிறது.
வரும் பிப்ரவரி மாதம் 25 - ந் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு, பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் எனப்படும் உலகின் மிகப்பெரிய மொபைல் குறித்த மாநாடு நடக்க உள்ளது.
அப்போது 5ஜி தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கும் போன்களை அறிமுகம் செய்ய செல்போன் நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன. இந்தத்தகவலை, தி கொரியா ஹெரால்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சாம்சங், எல்.ஜி. நிறுவனங்கள் தங்களின் 5ஜி போன்களை இம்மாநாட்டின்போது வெளியிட இருப்பதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
ஜி7 திங்க்யூ நிறுவனம் புதிதாக ஸ்நாப்ட்ராகன் 855 பிராசசரை அறிமுகம் செய்துள்ளது. 5ஜி தொழில்நுட்பத்திற்கான அப்டேட் ஆக வெளியிடப்பட உள்ளது. எல்.ஜி. நிறுவனத்தின் புதிய 5 ஜி போன் வருகிற மே மாதம் கொரியாவிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி போனை இந்த வருடம் ஐரோப்பாவில் வெளியிடும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆக, 5ஜி போன் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்க்கலாம்.
Related Tags :
Next Story