வானவில் : உணவு பரிமாறும் ‘பென்னி ரோபோ’


வானவில் : உணவு பரிமாறும் ‘பென்னி ரோபோ’
x
தினத்தந்தி 2 Jan 2019 5:44 PM IST (Updated: 2 Jan 2019 5:44 PM IST)
t-max-icont-min-icon

உணவகங்களில் சர்வர் வேலை பார்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

பரிமாறுதல், விருந்தினரை கனிவாக உபசரித்தல், உணவுகளை சிந்தாமல் கொண்டு வருதல், மேஜையை சுத்தம் செய்தல் போன்ற பலதரப்பட்ட விஷயங்களை கவனமுடன் செய்ய வேண்டிய பொறுப்பாகும். கலிபோர்னியா நகரைச் சேர்ந்த பியர் ரோபோடிக்ஸ் நிறுவனம் சர்வர்களின் வேலையை செய்வதற்காகவே ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளது. ‘பென்னி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகிறது. உணவு தயாரானதும் பென்னிக்கு அதன் செயலி மூலம் தகவல் அனுப்பப்படும். உணவை எடுத்துக் கொண்டு பென்னி சரியான மேஜைக்கு உணவைக் கொண்டு போய் வைத்துவிடும்.

இது மட்டுமின்றி மீதமுள்ள உணவுகளை சுத்தம் செய்து கிச்சனுக்கு கொண்டு போய்விடும். பென்னிக்கு கைகள் இல்லை. ஒரு உதவியாளருடன் பென்னி தனது வேலையை செய்து முடிக்கிறது. ஒரு உணவகத்தில் பென்னி தற்பொழுது ஏழு நாட்களும் வேலை செய்கிறது. ஓய்வில்லாமல், சலிப்பில்லாமல் உணவு பரிமாறும் இந்த பென்னியை காண்பதற்காவே அந்த ஓட்டலுக்கு கூட்டம் வருகிறது. கூடிய விரைவில் பென்னியின் சேவையை பல ஓட்டல்களுக்கு பயன்படுத்தும் திட்டம் இருப்பதாக கூறுகின்றனர்.

Next Story