அசோக்நகரில் மாநகராட்சி பூங்கா காவலாளி மனைவியுடன் தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது
சென்னை அசோக் நகரில் மாநகராட்சி பூங்கா காவலாளி மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை,
சென்னை அசோக்நகர் 48-வது தெருவில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்தவர் இருதயராஜ் (வயது 61). இவரது மனைவி புஷ்பமேரி (58). தம்பதியினர் பூங்காவிலேயே தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த பூங்காவுக்கு நேற்று அதிகாலை நடைபயிற்சி சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பூங்காவில் இருதயராஜூம், புஷ்பமேரியும் இறந்து கிடந்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு அசோக்நகர் போலீசார் விரைந்தனர். இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் இருதயராஜூம், புஷ்பமேரியும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் இருந்து உருக்கமான கடிதமும் சிக்கியது. அந்த கடிதம் அவர்களது மகன் தேவேந்திரனுக்கு எழுதப்பட்டிருக்கிறது.
அதில், ‘எங்களின் உடல்களுக்கு ஈமச் சடங்கு செய்யாமல், எங்களை பிச்சைக்காரர்களாக்கி விடாதே. உனது வங்கி கணக்குக்கு ரூ.2 ஆயிரத்து 500 அனுப்பி உள்ளோம். அதன் மூலம் எங்களுக்கு ஈமச் சடங்கை நிறைவேற்று. நல்லபடியாக இரு’, என்று எழுதப்பட்டிருந்தது.
தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பதற்கு குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா? என்பது குறித்து அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருதயராஜின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அசோக்நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story