புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல் படுகாயம் அடைந்த வாலிபர் உயிரிழந்தார்


புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல் படுகாயம் அடைந்த வாலிபர் உயிரிழந்தார்
x
தினத்தந்தி 3 Jan 2019 3:30 AM IST (Updated: 3 Jan 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த வாலிபர் உயிரிழந்தார்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே உள்ள வன்னிப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் மாயா (வயது 45). இவரது மகன் விஜி (25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று தனது சக நண்பர்களுடன் அனுப்பம்பட்டு சின்ன காலனியில் நடந்த புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

விஜி மற்றும் சந்துரு என்கிற ஜெகன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story