பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் இறுதி கட்ட பராமரிப்பு பணி


பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் இறுதி கட்ட பராமரிப்பு பணி
x
தினத்தந்தி 3 Jan 2019 3:45 AM IST (Updated: 3 Jan 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் இறுதி கட்ட பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட பகுதி உடனடியாக சீரமைக்கப் பட்டாலும் தூக்குப்பாலம் முழுமையாக சீரமைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் செல்வது நிறுத்தப்பட்டது. பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகளானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தின் உறுதி தன்மை, எடையை அதிகரிக்கும் வகையில் அதற்கான பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கனமான இரும்பு பொருட்கள் டிராலி மூலம் தூக்குப்பாலத்திற்கு கொண்டு வரப்பட்டு பணியானது வேகமாக நடைபெற்று வருகிறது.

மேலும் தூக்குப்பாலத்தில் நடந்து வரும் உறுதிதன்மை மற்றும் எடை அதிகரிப்பு பணிகளை மத்திய அரசின் கட்டமைப்பு ஆய்வுகுழுவினர் 12 பேர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தூக்குப்பாலத்தை முழுமையாக ஆய்வு செய்த அவர்கள் கேமரா மூலமும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தூக்குப்பாலத்தின் எடை அதிகரிப்பு பணிகள் முடிந்து வருகிற 5 அல்லது 6-ந்தேதியில் தூக்குப்பாலம் வழியாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தவும் ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Next Story