கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் மையம் திறப்பு
கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் மையம் நேற்று திறக்கப்பட்டது.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் மையம் நேற்று திறக்கப்பட்டது.
வழக்கு தாக்கல் மையம்
கோவில்பட்டியில் சப்-கோர்ட்டு, முன்சீப் கோர்ட்டு, முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, விரைவு கோர்ட்டு உள்ளது. அந்தந்த கோர்ட்டில் சென்று பொதுமக்கள் வழக்குகளை தாக்கல் செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், கோவில்பட்டி சப்-கோர்ட்டு வளாகத்தில் ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் மையம் மற்றும் நீதித்துறை சேவை மையம் அமைக் கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
சட்ட ஆலோசனை
சப்-கோர்ட்டு நீதிபதி பாபுலால் தலைமை தாங்கி, ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் மையம் மற்றும் நீதித்துறை சேவை மையத்தை திறந்து வைத்தார். மேலும் அதன் பெயர் பலகையையும் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘கோவில்பட்டியில் உள்ள 5 கோர்ட்டுகளில் சென்று பொதுமக்கள் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு பதிலாக, ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் மையம் மற்றும் நீதித்துறை சேவை மையத்தில் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வழக்குகள் சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் இங்கு சட்டம் தொடர்பான ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும்‘ என்றார்.
விழாவில் மாவட்ட உரிமையியல் நீதிபதி நிஷாந்தினி, முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சங்கர், 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தாவூது அம்மாள், அரசு வக்கீல் சந்திரசேகர், வக்கீல்கள் பாபுராஜ், சம்பத்குமார், ராமச்சந்திரன், சங்கர் கணேஷ், முத்துகுமார், கோர்ட்டு சிரஸ்தார் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story