பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா
பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
ஓட்டப்பிடாரம்,
பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் உள்ள அவரது குல தெய்வமான வீரசக்க தேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பெண்கள் ஆலயம் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள், பால் அபிஷேகம் நடந்தது.
அதன்பின்னர் அரசு சார்பில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசு வீமராஜ என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரை மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இனிப்பு
வீரசக்கதேவி ஆலய குழு சார்பில் அதன் தலைவர் முருகபூபதி தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணை தலைவர்கள் முருகேசன், வேலுசாமி, இணை செயலாளர் முருகபூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கு ‘கேக்’ வெட்டி கட்டபொம்மன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
கயத்தாறு
கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தூணுக்கு கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அங்குள்ள மணிமண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் செல்வராணி, கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை தலைவர் கே.எஸ்.குட்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில பொதுச்செயலாளர் சங்கரவேலு, கொள்கை பரப்பு செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்டவர்களும், வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உள்ளிட்டவர்களும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார், உள்ளிட்டவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டப வளாகத்தில் உள்ள வீரசக்கதேவி ஆலயத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
Related Tags :
Next Story