சபரிமலை கோவில் பிரச்சினைக்கு கேரள அரசின் தவறான அணுகுமுறையே காரணம் எடியூரப்பா பேட்டி


சபரிமலை கோவில் பிரச்சினைக்கு கேரள அரசின் தவறான அணுகுமுறையே காரணம் எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2019 4:00 AM IST (Updated: 4 Jan 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை கோவில் பிரச்சினைக்கு கேரள அரசின் தவறான அணுகு முறையே காரணம் என்று எடியூரப்பா கூறினார்.

சிவமொக்கா, 

சபரிமலை கோவில் பிரச்சினைக்கு கேரள அரசின் தவறான அணுகு முறையே காரணம் என்று எடியூரப்பா கூறினார்.

மடாதிபதிகள் மாநாடு

சிவமொக்கா டவுனில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஒரு வாரம் மடாதிபதிகள் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாடு நடக்க உள்ள இடத்தில் நேற்று கர்நாடக பா.ஜனதா தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் முதல்-மந்திரி ஆனால் பதவியேற்ற 24 மணி நேரத்தில் விவசாயிகளின் கடன் முழுவதும் தள்ளுபடி செய்வேன் என்று குமாரசாமி கூறினார். ஆனால் அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்று 7 மாதங்கள் ஆகிறது. இன்னும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் தேசிய வங்கிகளில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று, குமாரசாமி குறை கூறி வருகிறார்.

வறண்ட கர்நாடகம்

கர்நாடகத்தில் 100 தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக முதலில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது 156 தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே நிலை நீடித்தால் அகண்ட கர்நாடகம், வறண்ட கர்நாடகம் என்று பெயர் பெற்று விடும்.

பக்தர்களின் போராட்டத்தையும் மீறி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2 பெண்கள் தரிசனம் செய்து உள்ளனர். இதனால் கேரளாவில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. சபரிமலை கோவில் பிரச்சினைக்கு கேரள அரசின் தவறான அணுகு முறையே காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story