முல்லுண்டில் வீட்டின் குளியலறையில் இளம்பெண் மர்மச்சாவு


முல்லுண்டில் வீட்டின் குளியலறையில் இளம்பெண் மர்மச்சாவு
x
தினத்தந்தி 4 Jan 2019 5:15 AM IST (Updated: 4 Jan 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

முல்லுண்டில் வீட்டில் உள்ள குளியலறையில் இளம்பெண் பலியானார். அவரின் மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தானே,

முல்லுண்டில் வீட்டில் உள்ள குளியலறையில் இளம்பெண் பலியானார். அவரின் மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்

மும்பை முல்லுண்டு பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் நிப கலா (வயது 21). இவர் புத்தாண்டையொட்டி நண்பர்களுடன் லோனவாலா சென்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் குளியலறைக்கு குளிக்க சென்றார். இதில் அவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால் அவரின் பெற்றோர்கள் குளியலறை கதவை தட்டி இளம்பெண்ணை அழைத்து பார்த்தார்கள், இதில் உள்ளே இருந்து தண்ணீர் விழும் சத்தம் மட்டும் கேட்டது, ஆனால் அவர் பதில் ஏதும் கூறவில்லை.

இதனால் பதறிப்போன அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இளம்பெண் பேச்சுமூச்சின்றி அசைவற்று கிடந்தார். இதைபார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பலி

இதையடுத்து உடனடியாக நிப கலாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த முல்லுண்டு போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் இளம்பெண்ணின் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story