நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பொதுமக்களிடம் காணொலி காட்சியில் பேசும் முதல்-மந்திரி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் காணொலி காட்சி மூலம் பொதுமக்களுடன் பேச தொடங்கி உள்ளார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் காணொலி காட்சி மூலம் பொதுமக்களுடன் பேச தொடங்கி உள்ளார்.
காணொலி காட்சி
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ‘நான் முதல்-மந்திரி பேசுகிறேன்' என்ற நிழச்சி மூலம் பொது மக்களுடன் பேசி வந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட 6 மாதங்களில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி மீண்டும் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ‘லோக் சம்வாத்' என்ற நிகழ்ச்சி மூலம் பொது மக்களிடம் பேசத் தொடங்கி உள்ளார்.
நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ‘பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு' திட்டத்தின் பயனாளர்களிடம் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது ஒரு பெண் வீடு கட்ட மணல் கிடைக்கவில்லை என கூறினார். இதையடுத்து முதல்-மந்திரி அந்த பெண்ணுக்கு வீடு கட்ட தேவையான மணலை இலவசமாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நேரடி ஒளிபரப்பு
இந்த நிகழ்ச்சி மூலம் மாதத்திற்கு 2 முறை முதல்-மந்திரி காணொலி காட்சி மூலம் பொதுமக்களிடம் பேச உள்ளார். இது தூர்தர்ஷன் மற்றும் பேஸ்புக், டுவிட்டரில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
முதல்-மந்திரி அடுத்த நிகழ்ச்சியில் விவசாய திட்டங்கள் குறித்து அதன் பயனாளர்களிடம் பேசலாம் என அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story