மாவட்ட செய்திகள்

கேரளாவில் முழு அடைப்பு எதிரொலி, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி காய்கறிகள் தேக்கம் + "||" + Echoing the whole shutters in Kerala, Around 2 crore vegetables are stagnant in the market

கேரளாவில் முழு அடைப்பு எதிரொலி, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி காய்கறிகள் தேக்கம்

கேரளாவில் முழு அடைப்பு எதிரொலி, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி காய்கறிகள் தேக்கம்
கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடிக்கு காய்கறிகள் தேக்கம் அடைந்தன.
ஒட்டன்சத்திரம், 

தென் தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் உள்ளது. இங்கு சத்திரப்பட்டி, விருப்பாட்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதுதவிர வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கு 70 சதவீத காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளாவுக்கு மட்டும் தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2 பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்ப முடியாததால் தேக்கம் அடைந்தன.

மற்ற பகுதிகளுக்கு மட்டும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது. கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்பாததால் சுமார் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முழு அடைப்பு போராட்டம்; புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, பல இடங்களில் மறியல்- 1000 பேர் கைது
தொழிற்சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுவையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங் களில் மறியலில் ஈடுபட்ட 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்த தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் திடீர் கைது
முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்த தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டார்.
3. புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
4. புதுவையில் பா.ஜ.க. முழு அடைப்பு போராட்டம்; பல தனியார் பேருந்துகள் இயங்கவில்லை
புதுச்சேரியில் பா.ஜ.க. முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் பல தனியார் பேருந்துகள் அங்கு இயங்கவில்லை.