எழுதுபொருள், அச்சுத்துறையில் நவீனமயம் அவசியம் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்


எழுதுபொருள், அச்சுத்துறையில் நவீனமயம் அவசியம் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:30 AM IST (Updated: 4 Jan 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையை நவீனமயமாக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை அரசு அலுவலகங்களில் நாள்தோறும் ஆய்வுகளை நடத்தி வரும் கவர்னர் கிரண்பெடி நேற்று புதுவை அரசின் எழுதுபொருள் அச்சுத்துறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அச்சகத்தையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்ததுறையில் 416 பேர் பணிபுரிகின்றனர்.

இந்த துறையின் மூலம் நோட்டு, புத்தகம் மற்றும் புதுவை அரசுக்கு தேவையான எழுதுபொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த துறை மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் நில அளவைத்துறை பெரிய அளவில் பயனடைகிறது.

இங்கு ஆய்வு நடத்திய கவர்னர் கிரண்பெடி துறையின் நடவடிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தினார். இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து அரசிதழ்களும் கிடைக்கும் வகையில் இணையதளத்தில் ஒரு பிரிவினையும் தொடங்கக் கூறினார். இந்த துறையில் நவீன மயம் அவசியம் என்று கூறிய கவர்னர் அதுதொடர்பான திட்டத்தை அரசிடம் தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.

அதன்பின் உயர்கல்வித்துறை அலுவலகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரூசா திட்டத்தின்கீழ் மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்க இணையதள வசதிகளை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, உயர்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story