பொறையாறு அருகே பரபரப்பு: புதரில் கிடந்த ரூ.1 கோடி தங்க கட்டிகள் போலீசார் விசாரணை
பொறையாறு அருகே புதரில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் கிடந்தது. அதை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொறையாறு,
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொறையாறு வழியாக சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் நாகை மாவட்டம் பொறையாறு அருகே நண்டலாறு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு, அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல நேற்று பொறையாறு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில், நாகை மாவட்ட மதுவிலக்கு போலீசார் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு பஸ்சில் அவர்கள் சோதனை செய்தனர். பின்னர் அங்கிருந்து பஸ் புறப்பட்டு சென்னை நோக்கி சென்றது. பஸ் அங்கிருந்து சென்ற பின்னர் சோதனை சாவடியை நோக்கி போலீசார் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு புதரில் ஒரு பை கிடந்தது.
உடனே போலீசார் அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். சோதனையில், அந்த பையில் 26½ தங்க கட்டிகள் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தங்க கட்டிகளை பொறையாறு போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் எடுத்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் பொறையாறு போலீசார் தங்க கட்டிகளை பார்வையிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மொத்த எடை 3,075 கிராம். இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும்.
இந்த தங்க கட்டிகள் அந்த புதரில் கிடந்தது எப்படி? பஸ்சில் யாரேனும் தங்க கட்டிகளை கடத்தி சென்று இருக்கலாம் என்றும், போலீசார் சோதனை நடத்துவதை பார்த்ததும் தங்க கட்டிகளை கடத்தி சென்றவர் தங்க கட்டிகள் வைத்து இருந்த பையை பஸ்சில் இருந்து புதரில் தூக்கி வீசி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொறையாறு அருகே புதரில் ரூ.1 கோடி தங்க கட்டிகள் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story