தானேயில் குடோன்களில் கொள்ளையடித்து வந்த 12 பேர் கைது ரூ.30 லட்சம் பொருட்கள் பறிமுதல்

தானேயில் குடோன்களில் கொள்ளையடித்து வந்த 12 பேர் கைது ரூ.30 லட்சம் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:15 AM IST (Updated: 4 Jan 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் குடோன்களில் கொள்ளையடித்து வந்த 12 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தானே,

தானேயில் குடோன்களில் கொள்ளையடித்து வந்த 12 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடோன்களில் கொள்ளை

தானே ஷீல்டைகர் பகுதியில் உள்ள குடோன்களில் கடந்த 2 மாதமாக கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. கொள்ளையர்கள் குடோன்களில் இருந்த ஜெராக்ஸ் எந்திரங்கள், உலோக பொருட்கள் உள்பட பல பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர்.

இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இருவேறு கும்பலை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி இருந்தது தெரியவந்தது.

12 பேர் கைது

இதையடுத்து போலீசார் அந்த கும்பல்களை சேர்ந்த 12 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதில், அமித், மகேஷ்பாய், குஷ் கேசவ், சுல்பிகார் யூசுப், சந்திரகாந்த் ஆகியோர் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் ஆவர். ஆஷிப் இக்பால், மிதேஷ் ராஜ்பர், முகமது அமின், பிரகாஷ், வினோத்குமார், சூரஜ், சபான் அலி ஆகியோர் மற்றொரு கும்பலை சேர்ந்தவர்கள்.

போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Next Story