புதுச்சத்திரம் அருகே தீ விபத்து: 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகி செத்தன


புதுச்சத்திரம் அருகே தீ விபத்து: 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகி செத்தன
x
தினத்தந்தி 4 Jan 2019 4:00 AM IST (Updated: 4 Jan 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகி செத்தன.

பரங்கிப்பேட்டை, 

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ஜெயராஜ்(வயது 38). இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். தற்போது அந்த கோழிப்பண்ணையில் 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார்.

இந்த கோழிப்பண்ணையின் மேற்கூரை தகரத்தாலும், பக்கவாட்டு பகுதிகள் கழிகளாலும் அடைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கோழிப்பண்ணையில் திடீரென தீப்பற்றிக்கொண்டது. சிறிது நேரத்தில் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது.

இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் பண்ணையில் இருந்த 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகளும், தீயில் கருகி செத்தன.

மேலும் பண்ணையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது. இதன் மொத்த சேதமதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story