சிதம்பரம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை


சிதம்பரம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 4 Jan 2019 3:45 AM IST (Updated: 4 Jan 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம், 

சிதம்பரம் அடுத்த சி.பொன்னம்பலம் நகரை சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன் மகன் ராஜேஸ்வரன் (வயது 31). விவசாயி. இவர் கடந்த 1994-ம் ஆண்டு சிதம்பரம் உடையூர் கிராமத்தை சேர்ந்த தங்கராசு என்பவரிடம் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் கொடுத்து 6 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்யாமல் வாங்கி உள்ளார். இந்த நிலையில் தங்கராசு இறந்து விட்டார். இதையடுத்து தங்கராசுவின் மருமகள் உமாதேவி, ராஜேஸ்வரன், தங்கராசுவிடம் இருந்து 6 ஏக்கர் நிலத்தை முறையாக வாங்கவில்லை என்று கூறி காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உமாதேவிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரன் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ராஜேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story